நாச்சியம்மன் கோவில் திருப்பணி பாலாலய விழா

நாச்சியம்மன் கோவில் திருப்பணி பாலாலய விழா

நாச்சியம்மன் கோயில்

ஆடுதுறை மருத்துவக்குடி மாணிக்க நாச்சியம்மன் கோவில் திருப்பணி பாலாலய விழா நடந்தது.

ஆடுதுறை மருத்துவகுடி கிராமத்தில் எல்லை தெய்வமாகவும், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் முகப்பு பகுதியில் அமைந்திருக்கும் பழமையான கோயில்களில் ஒன்றாக விளங்கக்கூடிய மாணிக்க நாச்சியம்மன் கோயில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது‌

திருப்பணிகள் தொடக்க விழா பாலாலயம் வாஸ்து சாந்தி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜைகளுடன் தொடங்கி சிறப்பு யாக பூஜை நடந்தது. இரண்டு மாதங்களுக்குள் திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் முரளீதரன், கும்பாபிஷேக திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் அஞ்சப்பர், ஆறுமுகம், ராஜா, குமணன், ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story