திருச்சியில் நாடார் பேரவை நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகை

திருச்சியில் நாடார் பேரவை நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகை

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாடார் சங்க நிர்வாகிகள்

திருச்சியில் நாடார் பேரவை நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய நாடார் பேரவையின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய நாடார் பேரவை தலைவர் ஜெ.டி.ஆர். சுரேஷை கண்டோன்மெண்ட் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து இந்திய நாடார் பேரவை தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பேரவையின் பொதுச்செயலாளர் ராஜ்குமார், தலைமைச் செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் எஸ்.வி. கணேசன், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story