நாகை மாவட்டம் அச்சலிங்க சுவாமி கோயில் பங்குனி பெருவிழா
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அச்சலிங்க சுவாமி கோயில் பங்குனி பெருவிழா கடந்த 31ம் தேதி வல்லாங்குளத்து மாரியம்மன் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது அதைத் தொடர்ந்து அய்யனார் உற்சவமும்அஞ்சு வட்டத்தமனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை இரவு பல்வேறு வாகனத்தில் அஞ்சு வட்டத்தம்மன் வீதி உலா காட்சி நடைபெறுகிறது.
நேற்று 8ம் தேதி அஞ்சு வட்டத்தம்மன் மலர் அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது கோயிலில் இருந்து புறப்பட்ட அஞ்சு வட்டத்தம்மன் கீழவீதி ,தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோயிலை சென்றடைந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு அஞ்சுவட்டாரத்தம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நாளை 10ம் தேதி காலை 7.00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. வரும் 12ஆம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பூமிநாதன் கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள் செய்து வருகின்றனர் .