அக்னீவீர திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் -நாகை மாவட்ட ஆட்சியர்
நாகபட்டினம் மாவட்ட ஆட்சியர்
அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீரவாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 06.02.2024 ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. agnipathvayu.cdac.in கீழ்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு 17.03.2024 அன்று நடத்தப்படும். ஜனவரி 02, 2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜீலை 2, 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். இத்தேர்வானது மூன்று முறைகளை கொண்டது எழுத்துத் தேர்வு, உடல் தகுதிதேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். ஆக்னீவீர திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50,000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடிந்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டம் குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 30.01.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.வல் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீரவாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 06.02.2024 ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. agnipathvayu.cdac.in கீழ்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு 17.03.2024 அன்று நடத்தப்படும். ஜனவரி 02, 2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜீலை 2, 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். இத்தேர்வானது மூன்று முறைகளை கொண்டது எழுத்துத் தேர்வு, உடல் தகுதிதேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.
ஆக்னீவீர திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50,000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடிந்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டம் குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 30.01.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.