நாகை விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

நாகை விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

ஜூன் 12 தண்ணீர் திறக்காத ஒன்றிய அரசு மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் கதவணைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.


ஜூன் 12 தண்ணீர் திறக்காத ஒன்றிய அரசு மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் கதவணைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

ஜூன் 12 தண்ணீர் திறக்காத ஒன்றிய அரசு மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் கதவணைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் வருடாவருடம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

ஆனால் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காமல் ஏமாற்றி வருவதால் கடந்த வருடம் ஜூன் 12 குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு திறக்கவில்லை. இதனால் கவலையடைந்துள்ள நாகை விவசாயிகள் நாகை மாவட்டம் தேவூர் அடுத்துள்ள ஆத்தூர் பாசன வாய்க்கால் கதவனைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று தண்ணீர் திறக்காத காரணத்தால் மேட்டூர் அணை நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் நான்கரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த வருடம் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 97.5 டி.எம்.சி தண்ணீரை வழங்காமல் ஏமாற்றிய கர்நாடகா அரசு இந்த ஆண்டாவாது டெல்டா விவசாயிகள் பயன்பெற குறுவைக்கு தேவையான 90 டி.எம்.சி தண்ணீரை இதுவரை வழங்காத காரணத்தால் குறுவை சாகுபடி தொடங்குவது கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே, குறுவை சாகுபடிக்கு விரைந்து காவிரி நீரை தமிழக அரசு கர்நாடகா அரசு மற்றும் ஒன்றிய அரசிடம் பேசி பெற்றுத்தர வேண்டும், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை கர்நாடகா அரசு ஏற்க வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் ஆதிகாரமிக்க ஆணையாமாக செயல்பட வேண்டும், இவை அனைத்தையும் மோடி அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தை வஞ்சித்து வரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நீர்வளத்துறை இணையமைச்சர் பதவி வழங்கியுள்ள ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், அவரது இணையமைச்சர் பதவியை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story