நாகை நகராட்சிப் பள்ளியில் முப்பெரும் விழா - மாணவிகள் உற்சாகம்..!

நாகை நகராட்சிப் பள்ளியில் முப்பெரும் விழா - மாணவிகள் உற்சாகம்..!

 முப்பெரும் விழா

நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கலை நிகழ்ச்சிகளுடன், களை கட்டிய முப்பெரும் விழா; ஆடல்,பாடலைக் கேட்டு வைப்பான பள்ளி மாணவிகள்.
நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் முக்கூடல் விழா, விளையாட்டு விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற தமிழ் முக்கூடல் விழாவில், பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் களைகட்டின. இதில் சினிமா மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு மாணவிகள் ஆடிய நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதைப்போல் ஹிந்தி பாடலுக்கும், கரகாட்டம், கோலாட்டத்திற்கு மாணவிகள் ஆடிய நடனத்தைக் கண்டு அனைத்து மாணவிகளும் கைத்தட்டி உற்சாகப்படுத்தி குதூகலித்தனர். இதில் ஆறாம் வகுப்பு பயிலும் சில மாணவிகள் வாழ்வியலை நாட்டுப்புற தெம்மாங்கு பாடலுடன் கலந்து உருக்கமாக பாடி அனைவரது கைதட்டலையும் பெற்றனர். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, நகர்மன்ற தலைவர் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Tags

Next Story