நாகை : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

நாகை : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

நாகப்பட்டினம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 5,49,443 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,இன்று (22.01.2024) வெளியிட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 22.01.2024 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 651 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. மொத்தம் 5,49,443 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,68,725 ஆண்களும், 2,80,694 பெண்களும், இதர வகுப்பினர் 24 பேர்களும் உள்ளனர். மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், தேர்தல் வட்டாட்சியர் சாந்தி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story