ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நாகலாந்து ஆளுநர் இல கணேசன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம் நடைபெற்று வருகிறது.வருகின்ற 8. ஆம் தேதி எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில் நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் தனது குடும்பத்தினருடன் இன்று ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோவிலுக்கு வந்த கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி தரிசனம் செய்த நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அர்ப்பணிப்பின் முழு உருவமும் ஆண்டாள் தான். பக்தியின் உருவமாகவும் சமர்ப்பணத்தின் உருவமாகவும் இருக்கக்கூடிய ஆண்டாளை டெல்லியை சேர்ந்த குடும்பத்தினருக்கு ஆண்டாள் தென்னகத்தில் மீரா என அறிமுகம் செய்து வைத்தேன்.

நாகலாந்தில் இருந்து வந்திருப்பதால் வெள்ளம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மத்திய அரசும் மாநில அரசும் தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள். பத்திரிகைகளில் பார்த்த செய்தியை வைத்து ஏற்கனவே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது பேரிடராக அறிவித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அறிவிக்க வேண்டியது தான் பாக்கி இருக்குமே தவிர பேரிடரா ? தேசிய பேரிடரா என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

நாகலாந்தில் எந்த பிரச்சினை வந்தாலும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தமிழகத்தில் நடைபெறும் விஷயத்தை கொண்டு செல்வதற்கென்று பொறுப்பாக பலர் இருக்கிறார்கள். அதனால் நான் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நிச்சயம் செய்வார்கள். ஆர்எஸ் பாரதி குறித்த கேள்விக்கு, சிலருக்கு தவறான கண்ணோட்டங்கள் இருக்கிறது. நாகலாந்திற்கு வந்து ராஜ் பவனில் தங்குங்கள். நாகலாந்து மக்கள் பெருமை மிக்கவர்கள். பண்பானவர்கள் யாரோ ஒரு சிலர் சொல்வதை வைத்து ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட மக்களை பற்றி சொல்லக்கூடாது.

அது முடிந்து போன விஷயம் கிளற வேண்டியது இல்லை. பொங்கல் நிதி குறித்த கேள்விக்கு, எனக்குத் தெரிந்த ஒரே நிதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தான் தெரியும். மற்ற நிதி எனக்கு தெரியாது. தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் போக்கு இருப்பது குறித்த கேள்விக்கு, தமிழகம் மட்டுமின்றி பஞ்சாப் கேரளா போன்ற மாநிலங்களில் ஆளுநருக்கு அரசுக்கும் பிரச்சனை இருக்கிறது.

அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு என்ன அதிகாரம் என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதை அலசி ஆராய்ந்து யார் சரி, யார் சரி இல்லை என்று ஆராய்ந்து சொல்பவர்கள், அரசியல் சாசனம் அறிந்த பெரியவர்கள் தான். அரசாங்கத்துக்கும் தெரியும். ஆளுநருக்கும் தனது வரம்பு தெரியும் வரம்பு மீறுவதும் தெரியும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags

Next Story