விரைவில் தொடங்கும் புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி

விரைவில் தொடங்கும் புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி

விரைவில் வண்ணார் சமூகத்தின் கணககெடுப்பு பணி

தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் தலைமையில் புதிரை வண்ணார் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை கண்டறிவதற்காக மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கான இப்சோஸ் என்ற பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் நியமித்துள்ளது.

இந்த நிறுவனம் துறை அதிகாரிகள், புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்கள் உள்ளுர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் செயல்முறைகளை விளக்கி வருகின்றன. இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு பற்றிய பரவலான தகவல்ளை எடுத்துச்செல்ல ஆதரவு கேட்டுக்கொண்டனர்.

கணக்கெடுப்பு குழு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம அளவிலான மற்றும் குடும்ப அளவிளான கணக்கெடுப்பை நடத்தும், மேலும் அவர்களிடம் நேரடியாக தகவல்களை பெற்று ஆய்வு செய்யவும். சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள், புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த சமூக மக்களின் விவரங்களை நேரடி கள ஆய்வு மூலம் மேற்கொள்ளப்படுவதால் அவர்களின் நலத்திட்டங்களை மேற்கொள்ள துல்லியமான ஆய்வு முடிவுகளை இப்சோஸ் நிறுவனம் வழங்கும்" என்றார்.

Tags

Next Story