நாகை கலெக்டர் வேண்டுகோள்

நாகை கலெக்டர் வேண்டுகோள்

நாகை ஆட்சியர்

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம்உறுப்பினராக பதிவு செய்ய நாகை கலெக்டர் ஜானி ஜாம்ர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி ஜாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், இராசா. அருண்மொழி துணைத்தலைவராக கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4. கல்வி உதவித்தொகை 5. திருமண உதவித்தொகை 6. மகப்பேறு உதவித்தொகை 7. மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் 8. முதியோர் ஓய்வூதியம் மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச்சார்ந்தவர்கள், 2) 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு 04365–251562 என்ற எண்னையும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story