இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 

இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடந்த தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது விழாவையொட்டி 12-ந்தேதி பால் குடம் மற்றும் காவடி வீதி உலா வந்தது. தொடர்ந்து செல்லமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது அப்போது மாரியம்மன் மணி மண்டபத்தில் அம்மன் சிறப்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

விரதமிருந்து காப்பு கட்டிகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குதிரை சேவகளார் ஆற்றுப்பாலத்தில் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர் பின்னர் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட இருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags

Next Story