நாகூர் தர்கா கந்தூரி விழா - நாகை எஸ்.பி ஆய்வு

நாகூர் தர்கா கந்தூரி விழா -   நாகை எஸ்.பி ஆய்வு

நாகூர் தர்கா கந்தூரி விழா - நாகை எஸ்.பி. ஆய்வு

நாகை மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முன்னேற்பாடுகளை மாவட்ட எஸ்.பி.ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467வது கந்தூரி தொடக்க விழா கடந்த 14ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சந்தனகூடு நடைபெறுகிறது. இதையடுத்து, நாகை எஸ்.பி. தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய நாகை எஸ்.பி., கந்தூரி விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொள்ள நாகூர் வருகிறார். இதையடுத்து, சந்தனக்கூடு மற்றும் ஆளுநர் வருகையை அடுத்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G. கார்த்திகேயன் ஆலோசனைபடி நாகை எஸ்.பி. ஹர்ஷ் சிங் மற்றும் அரியலூர் எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா ஆகியேர் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 13 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் 36 ஆய்வாளர்கள் 93 உதவி ஆய்வாளர்கள் தாலுக்க காவலர்கள் ஆயுதப்படை காவலர்கள் சிறப்பு காவல் படையினர் உட்பட 1000 காவலர்கள் மற்றும் 200 ஊர்காவல் படையினர்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 25 உயர் கண் காணிப்பு கோபுரம் ,126 கண் காண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. மேலும், 10 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்று நாகை எஸ்.பி. ஹர்ஷ் சிங் அப்போது தெரிவித்தார்.

Tags

Next Story