ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு

ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறாத வகையில் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களுடன் பிற இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கும் (193) தீண்டாமைக்கு எதிரான தீண்டாமை குற்றங்கள், வன்கொடுமை குற்றங்கள் பற்றியும், அதற்கான குடிமையில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1955, வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் 1989, வன்கொடுமை தடுப்பு விதிகள் 1955 நடைமுறைப்படுத்துதல், இச்சட்டங்களின் படி குற்றங்கள் செய்பவருக்கு வழங்கப்படும் தண்டணைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மேலும் தீண்டாமை அதிகம் நடைபெறும் கிராமங்கள் வேதாரண்யம் வட்டம், வாய்மேடு, கருப்பம்புலம், கடினல்வயல், தலைஞாயிறு 40 சேத்தி மற்றும் நாகப்பட்டினம் அந்தணப்பேட்டை கிராமங்களை கண்டறிந்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2016 முதல் 2022 வரை வன்கொடுமையால் கொலையுண்ட எட்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தீருதவி தொகை மற்றும் மூன்று நபர்களுக்கு அரசு வேலை, ஐந்து நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் தீருதவி தொகை விவரம் 2020 2024 ஆண்டு வரை மொத்தம் 99 வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான திருதவி தொகை ரூ.1,91,59,207/- வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவி மற்றும் இதர நல திட்டங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழங்கப்படும் தண்டணைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் மேற்கொள்ள வேண்டியவை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமூக நலத்திட்டங்கள், தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், DLVMC மற்றும் SUB DLVMC கூட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .க.ரேணுகாதேவி, காவல் துணை கண்காணிப்பாளர்(சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) பி.எஸ்.ராமகிருஷ்ணன், தனிவட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) ஹஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story