தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள்

மாணவ, மாணவிகளை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிலக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றன. அப்போட்டிகளில் வெற்றிபெற்ற 16 மாணவர்களுக்கு ரூ.48000/க்கான பரிசுத்தொகைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், திருக்குறள் முற்றோதலில் வெற்றிபெற்ற 11 மாணவர்களுக்கு தலா ரூ. 15000 காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர் ழங்கினார்.

மேலும் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றன. அப்போட்டிகளில் வெற்றிபெற்ற 18 மாணவர்களுக்கு ரூ.132000/-க்கான பரிசுத்தொகைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழறிஞர் உதவித்தொகை பெற்று வரும் இரா.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ரூ.10000/-க்கான காசோலைகளும், 2021 ஆண்டிற்க்கான தமிழ் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக தெரிவு செய்யப்பெற்ற தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ந.ஜோதிலெட்சுமி. தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story