நாகப்பட்டினம் : 2.30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

நாகப்பட்டினம் : 2.30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

நெல் கொள்முதல் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 2.30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக் கப்பட்டள்ளது. இதற்காக 180 நேரடி கொள்முதல் நிலையம் திறக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல முதுநிலை மேலாளர் சிவப்பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நாகப்பட்டினம் மண்டல முதுநிலை மேலாளர் சிவப் பிரியா கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடிகள் முடிவடைந்து அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வெளிமாவட்ட வியாபாரிகள் வாங்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் காலதாமதம் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்முதல் நிலையம் திறக்கப் பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. மாவட்டதை விட்டு நெல் மூட்டைகள் வெளி மாவட் டத்திற்கு செல்லாமல் • கொள்முதல் செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. வெளி மாநில நெல் • மூட்டைகள் கொள்முதல் - செய்வதை தடுக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அதேபோல் கொள் முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்வதாக ஆதரப்பூர்வமாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக பாதுகாவலர் முதல் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்களுக்கும் கூட்டம் போட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் பணம் கொடுக்க தேவையில்லை. விஜிலென்ஸ் உள்ளிட்ட துறைகளும் கண்காணித்து வருகிறது. கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அலுவலகத்தை தொடர்பு கொண்டு எப்போது வேண்டுமானாலும் புகார் * தெரிவிக்கலாம். எனவே இந்தாண்டு எந்தவித தடங்கலும் இன்றி விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செயது விவசாயிகள் பயன் பெறலாம் என்றார்.

Tags

Next Story