கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் பரபரப்பு

கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் பரபரப்பு

தேர்தல் புறக்கணிப்பு பேனர் 

திருமருகல் அருகே ராந்திமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் பேனர் வைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சி கீழத்தெரு,மேலத்தெரு,மெயின் ரோடு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் அடிப்படை வசதியான தண்ணீர் வசதி,மின்சார வசதி,சாலை வசதி, பிடாரி குளத்தில் சேதம் அடைந்த படித்துறை,இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திரும்ப கட்டி தராததால் அதிருப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆண்டிபந்தல் மெயின் ரோடு பகுதியில் பேனர் வைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story