பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
பெண் காவலர்களுக்கு மருத்துவ முகாம்
மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் பெண் காவலர்களை கருத்தில் கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாகை மாவட்ட ஆயுதப் படையில் west gard clinic சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமினை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடங்கி வைத்தார். அதில் நாகை காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையிடம் பேசுகையில் அனைத்து காவல்துறையினரும் பணியில் அக்கறை கொள்வது போலவே தன்னுடைய உடல் நலத்திலும் அக்கறை கொள்ளுதல் வேணும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்,
இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சிறப்பு மறுத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.