நாகராஜா கோவில் தை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகராஜா கோவில் தை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது


குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி நாகராஜன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுவாமி பத்மேந்திரா, நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ரோசிட்டா திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 7.20 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இதில் சுவாமி பத்மேந்திரா கலந்து கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இதைத் தொடர்ந்து புஷ்ப விமானத்தில் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags

Next Story