நாகர்கோவிலில் - சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்

நாகர்கோவிலில் - சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்
பைல் படம்
நாகர்கோவிலில் - சென்னை சிறப்பு ரயில் சுமார் எட்டு மணி நேரம் தாமதம் என்பதால் இந்த ரயிலுக்கு முன்பதி செய்திருந்த பயணிகள் பெருஞ்சிரமத்துக்கு உள்ளானார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரளா வழியாக சென்னைக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பாலக்காடு, திருப்பூர், .காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலை சென்றடையும். விடுமுறை தினத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் இந்த ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர். முன்பதிவு வசதியும் உண்டு. இந்த நிலையில் நேற்று மாலை 5.45 - க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் இரவு 11.30 - க்கு புறப்பட்டு செல்லும் என முதலில் அறிவித்தனர்.

ஆனால் அந்த ரயில் வரவில்லை. இதனால் காத்திருந்த பயணிகள் விசாரித்த போது அதிகாலை ஒரு மணிக்கு பின் பிளாட்பாரம் மூன்றில் ரயில் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 1.30 க்கு ரயில் புறப்பட்டு சென்றது. சுமார் 8 மணி நேரம் ரயில் தாமதமாக சென்றது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ரயில் பராமரிப்பு பணிக்கு போதிய ஆட்கள் இல்லை. ரயில் சுமார் எட்டு மணி நேரம் தாமதம் என்பதால் இந்த ரயிலுக்கு முன்பதி செய்திருந்த பயணிகள் பெருஞ்சிரமத்துக்கு உள்ளானார்கள்.

Tags

Next Story