நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத்  சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத்  சிறப்பு ரயில் இயக்கம்
ரயிலை வரவேற்ற எம்.பி விஜய் வசந்த்
நாகர்கோவில்- சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம் தொடங்கிய நிலையில் ரயிலுக்கு வரவேற்பு அளிப்பதில் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேற்று 4-ம் தேதி நாகர்கோவில் சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2:50க்கு புறப்பட்டது. இந்த ரெயிலுக்கு வரவேற்பு அளிப்பதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. ரயில் சேவையை நாகர்கோவிலுக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுத்தது தொடர்பாக சொந்தம் கொண்டாடி இந்த போட்டி நிலவியது. 2.10 மணியளவில் வந்த ரயிலை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், குமரி எம்.பி விஜய் வசந்த், எம்.எல் .எ-க்கள் எம். ஆர். காந்தி, ராஜேஷ்குமார் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் வரவேற்பளித்தனர்.

Tags

Next Story