நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத்  சிறப்பு ரயில்: இன்று முதல் துவக்கம்

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத்  சிறப்பு ரயில்: இன்று முதல் துவக்கம்
X
பைல் படம்
நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இன்று துவங்குகிறது.

நாட்டில் அதிவேகத்தில் செல்லக்கூடிய ரயில் சேவை கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தே பாரத் ரயில் இல்லாத நிலை காணப்பட்டது. எனவே வந்தே பாரத் ரயில் சேவையை குமரி மாவட்ட மக்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்தனர். இது தொடர்பாக பயணிகளின் கோரிக்கையின் பேரில், 2024 ஜனவரி மாதத்தில் வியாழக்கிழமைகள் தோறும் நாகர்கோவில் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாக அறிவித்தது.

அதன்படி இன்று 4-ம் தேதி நாகர்கோவில் சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று மதியம் 2:50க்கு புறப்பட உள்ளது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் வரவேற்பளிக்கிறார்கள்.

Tags

Next Story