நாகர்கோவில் சிறைகைதி திடீர் சாவு - டிஎஸ்பி விசாரணை

நாகர்கோவில் சிறைகைதி திடீர் சாவு - டிஎஸ்பி விசாரணை

டிஎஸ்பி விசாரணை

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்த சுங்கான் கடையில் உள்ள தனியார் செல்போன் டவரில் உள்ள ஏழு பேட்டரிகளை கடந்த மாதம் ஒரு கும்பல் திருடி சென்றது. இது தொடர்பான புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் திருவனந்தபுரம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த ரத்தன்குமார் என்ற வினோ (36), சுங்கான் கடை பகுதி அருணாசலம் (32) ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆச்சப்படுத்தி, நீதிமன்ற உத்தரன்படி இவர்கள் இருவரும் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 23- ஆம் தேதி திடீரென ரத்தன்குமாருக்கு உடல்நலவு குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலையில் ரத்தன் குமார் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் மாவட்ட சிறை அலுவலர் (பொறுப்பு) சம்பத் என்பவர் நேசமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிஎஸ்பி நவீன் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story