நாகர்கோவில்: மழை வெள்ளம் வெளியேற்ற நடவடிக்கை

நாகர்கோவில்: மழை வெள்ளம் வெளியேற்ற நடவடிக்கை
வெள்ளம் வெளியேற்ற நடவடிக்கை .
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடர் மழை நீடித்ததால் மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் மழை நீர் தேங்கியதால், அந்த பகுதி தனித் தீவு போல உள்ளது. காரணம் இரட்டை ரயில் பாதை பணி நடப்பதால் தண்ணீர் வழிந்து செல்லவில்லை. அங்கு கீழ் தளங்களில் குடியிருந்த மக்கள் வெளியேறினார். ஆனால் மேல் தளங்களில் வசிப்பவர்கள் எப்போது தண்ணீர் வழியும் என்று காத்திருந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் ரயில்வே அதிகாரியிடம் பேசி நீரை வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2 பொக்க்லைன் இயந்திரம் கொண்டு அடைக்கப்பட்ட மடைகளை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நேற்று திறந்தனர். அந்த மடையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வெள்ளம் வடிந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story