நாகர்கோவில் : நாகராஜா கோவிலில் திருப்பணிகள் தொடக்கம் 

நாகர்கோவில் : நாகராஜா கோவிலில் திருப்பணிகள் தொடக்கம் 
நாகர்கோவில் நாகராஜா கோவில் திருப்பணிகள் துவங்கியது
நாகர்கோவில் நாகராஜா கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இது பரிகார ஸ்தலமாக விளங்குவதால் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான பக்தர்கள் வந்து கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த கோயிலில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசு 1.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருப்பணிகள் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை யான இன்று தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை துவக்கி வைத்தார். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறநிலை துறை இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன், மேயர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், - குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 கோயில்கள் திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 100 கோவிலில் திருப்பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கோயில் பணிகளுக்கு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

Tags

Next Story