நாகர்கோவில் வியாபாரிகள் சங்கத்தினர் தேர்தல் புறக்கணிப்பு பேனர்கள் 

நாகர்கோவில் வியாபாரிகள் சங்கத்தினர் தேர்தல் புறக்கணிப்பு பேனர்கள் 

தேர்தல் புறக்கணிப்பு

நாகர்கோவில் சந்தையை சுற்றி தேர்தல் புறகணிப்பு போஸ்டர்களும் பேனர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கனகமூலம் காய்கறி சந்தை தமிழகம் கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்தையை இடித்து தரைமட்டம் ஆக்கி வணிக வளாகம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவித்தும் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இருந்தாலும் இப்போது உள்ளூரில் நடந்து வரும் தேர்தல் பிரச்சாரங்களில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்று சந்தையை இடிப்போம் என தேர்தல் பரப்புரை மூலம் கூறி வருகிறார். இதற்கு வியாபாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து இரண்டு வாரத்துக்கு முன்னதாக வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றி அதை மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்தது. ஆனால் அரசு அதிகாரிகள் தரப்பில் இதுவரை யாரும் பேச முன்வராததால் சந்தையை சுற்றி தேர்தல் புறகணிப்பு போஸ்டர்களும் பேனர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த சந்தையில் உள்ள 250க்கும் மேற்பட்ட கடையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தார் உட்பட 10,000 வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளது .

Tags

Next Story