பா ஜ.க பிரமுகருக்குக் கத்திகுத்து - பெண்  வெளிநாடு தப்பி ஓட்டம்? 

பா ஜ.க பிரமுகருக்குக் கத்திகுத்து - பெண்  வெளிநாடு தப்பி ஓட்டம்? 
வக்கீல் ராஜகோபால்
நாகர்கோவிலில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பாஜக பிரமுகர் கத்தியால் குத்தபட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் வெளிநாடு தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜகோபால் (73). வழக்கறிஞரான இவர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஆவார். சம்பவ தினம் காலையில் வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் அத்திமீறி நுழைந்த மர்ம கும்ப கும்பல் ராஜகோபாலை கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் படுகாயம் அடைந்தவர் தற்போது மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ராஜகோபாலின் கார் டிரைவர் பாஸ்கர் (50) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரன் முதல் கட்ட விசரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார் சென்னை சேர்ந்த வினோதினி (32) ஆறுமுக பாண்டி (48) மற்றும் கண்டால் தெரியும் இரண்டு பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆறுமுக பாண்டி, சென்னை அசோக் நகர் சேர்ந்த வெற்றிவேல் (34) திருவள்ளூர் மாவட்ட சேர்ந்த நவீன் 34) ஆகிய மூன்று பேர் ராதாபுரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சென்னையில் சேர்ந்த வினோதினியை கைது செய்ய தனிப்படை தீவிரம் காட்டி வந்த நிலையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story