நாகூர் தர்ஹா முத்திரை பதித்த நாணயம் வெளியிடணும் !
தர்ஹா முத்திரை பதித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று, நாகூர் வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு நடைபெற உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நாகூர் தர்காவில் தரிசனம் செய்ய சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து திருச்சியிலிருந்து கார் மூலம் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்து அங்கு தரிசனம் செய்தார்.
அப்போது தர்கா நிர்வாகம் சார்பில், நாகூர் தர்கா மராமத்து பணிக்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் வழங்கப்படும் என அரசாணை பிறபித்துள்ள நிலையில், மத்திய அரசு சார்பாக 68 கோடி ரூபாய் சிறப்புநிதி ஒதுக்க வேண்டுமென நாகூர் தர்ஹா முத்திரை பதித்த நாணயம் வெளியிட வேண்டும், எனவும் நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவர் கலீபா சாஹிப் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு அளித்தார்.