நல்ல நாயகி அம்மன் பொறையாரன் கோவில் திருத்தேரோட்டம்

நல்ல நாயகி அம்மன் பொறையாரன் கோவில் திருத்தேரோட்டம்

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன், ஸ்ரீ பொறையான் திருக்கோவிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.


மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன், ஸ்ரீ பொறையான் திருக்கோவிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லநாயகி அம்மன் ஸ்ரீ பொறையான் கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி உற்சவம் கடந்த மார்ச் மாதம் 18-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய விழாவான ஸ்ரீ நல்லநாயகி அம்மன் நாக பல்லாக்கில் வீதி உலா கடந்த 7-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் மற்றொரு முக்கிய உற்வசமான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ நல்லநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ பொறையான் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் எழுந்தருளச் செய்யப்பட்டனர். தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. கிராமமக்கள் தேர்களை தோள்களில் தூக்கி கொண்டு மணக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீதியுலாவாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

Tags

Next Story