நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது ஒற்றுமையோடு வழிப்பாடு

நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது ஒற்றுமையோடு வழிப்பாடு
வழிபாடு செய்த விவசாயிகள்
நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது ஒற்றுமையோடு வழிப்பாடு செய்தனர்.

நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை கிராமத்தில் விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது ஒற்றுமையோடு வழிபட்டனர்.

தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், சித்திரை முதல் அன்று புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டி, சேந்தன்குடி, கொத்தமங்கலம், வராப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி நல்லேறு பூட்டி விளை நிலத்தையும் வானத்தையும் வழிப்பட்டு தங்களது,

வேளாண் பணிகளை தொடங்கினர். இந்நிநிலையில் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை கிராமத்தில் நல்ல நாள் பார்த்து இன்று நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒரே இடத்தில்,

கூடி தேங்காய் பழம் தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து விளைநிலத்தில் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.அதன் பின்பு வரிசையில் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும் பூஜைகள் செய்த பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது.

இதில் 13 மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் சித்திரை மாதத்தில் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர்.இந்த மாங்கோட்டை கிராமத்தைப் பொறுத்தவரையில் அனைத்து விவசாயிகளும் ஒரே இடத்தில் ஒன்று கூடி சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டிய பின்பே மற்ற விவசாயிகள் அனைவரும் தங்கள் விளைநிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்குவது வழக்கமாக உள்ளது.அதன்படி இந்த ஆண்டும் நல்லேர் பூட்டும் நிகழ்வும் விளை நிலம் மற்றும் வானத்தை வழிபடும் பாரம்பரிய நிகழ்வு சித்திரை முதல் நாளான்று தொடங்க முடியாவிட்டாலும் இன்று உற்சாகத்தோடு நடைபெற்று முடிந்துள்ளது.

Tags

Next Story