நல்லுார் நத்தத்தனார் நினைவு தூண் சீரமைப்பு பணிகள் தீவிரம்

நல்லுார் நத்தத்தனார் நினைவு தூண் சீரமைப்பு பணிகள் தீவிரம்

நினைவு தூண் சீரமைப்பு பணிகள் 

நல்லுார் நத்தத்தனார் நினைவு தூண் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சங்க கால புலவர் நல்லுார் நத்தத்தனார். இவர், தமிழின் சங்க கால நுால்களில் ஒன்றான பத்துப்பாட்டின் கீழ் வரும் சிறுபாணாற்றுப்படை நுாலை இயற்றியவர்.

இவரது நினைவை போற்றும் விதமாக, 1992ம் ஆண்டு தமிழக அரசு சார்பில், நல்லுார் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகே நல்லுார் நத்தத்தனார் நினைவு துாண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ம் தேதி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் கவிஞர் நாள், நல்லுார் நத்தத்தனார் நினைவு துாண் அருகே கொண்டாட்டப்படுவது வழக்கம். நா

ளை தமிழ் கவிஞர் நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இடைக்கழிநாடு பேரூராட்சி சார்பில், நினைவு துாண் வெள்ளை அடித்து சீரமைக்கப்பட்டது.

Tags

Next Story