தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி

கவுண்டம்பாளையம் பகுதியில்பிரச்சாரத்தை துவக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுக பொது கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மண்டல செயலாளர் வகாப் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணியை அறிமுகப்படுத்தி பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் பேசினர். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் மக்களவை வேட்பாளர் கலாமணி கவுண்டம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சாலையோர கடைகள் மற்றும் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிரச்சாரத்தை துவங்கினார்.பின்னர் பேட்டியளித்த வேட்பாளர் கலாமணி தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் சிறு,குறு தொழில்கள் ஜி.எஸ்.டியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடும் என தெரிவித்தார். மற்ற கட்சிகளை விட இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகின்றோம் எனவும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தவர் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த தனக்கு பெண்களுக்கு அரசியலில் சம வாய்க்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக சீமான் வாய்ப்பளித்து இருப்பதாகவும் அனைத்து மக்களுக்கும் தரமான கல்வி,இலவச மருத்துவம் உள்ளிட்ட கொள்கைகளை சொல்லி வாக்குகளை சேகரிப்பதாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் வேட்பாளர் கலாமணி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவக்கி இருப்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story