நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

நகராட்சி பகுதிகளில் மாவட்ட  கலெக்டர் ஆய்வு

ஆய்வு 

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்

நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தில் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டு, மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை தரம் பிரிக்கப்படுவதையும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட கழிவுகளிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் தாசில்தார் சண்முகவேல், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story