நாமக்கல்: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் 10வது இடம் !

நாமக்கல்: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் 10வது இடம் !

நாமக்கல் மாவட்டம் இவ்வாண்டு மாநில அளவில் 10-ஆம் இடத்தை பெற்றுள்ளது.


நாமக்கல் மாவட்டம் இவ்வாண்டு மாநில அளவில் 10-ஆம் இடத்தை பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 197 பள்ளிகளை சார்ந்த 8,413 மாணவர்களும் 8,847 மாணவிகளும் என மொத்தம் 17,260 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 7,989 மாணவர்களும் 8.597 மாணவிகளும் என மொத்தம் 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 94.96% தேர்ச்சி மாணவிகளின் தேர்ச்சி 97.17% என மொத்தம் 96.10% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 89 அரசுப் பள்ளிகளை சார்ந்த மொத்தம் 8,309 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 7,776 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 93.58% . நாமக்கல் மாவட்டத்தில் 01 ஆதி திராவிட நல பள்ளியினை சார்ந்த மொத்தம் 96 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 87.50% ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 4 பழங்குடியினர் நல பள்ளிகளை சார்ந்த மொத்தம் 214 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி 92.52% ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 1 சமுக நலத்துறைப் பள்ளியினை சார்ந்த மொத்தம் 3 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 100% ஆகும். இவ்வாண்டு 60 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளில் 14 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டம் இவ்வாண்டு மாநில அளவில் 10-ஆம் இடத்தை பெற்றுள்ளது.

Tags

Next Story