நாமக்கல் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா.சு. தமிழ்மணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி நேற்று ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான தங்கமணி அவர்களின் ஆலோசனை பெயரில் மகளிர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் வெ. சரோஜா நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் வேம்பு சேகரன், பட்டணம் பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியம், தேமுதிக ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மத்துரூட்டு திம்மநாயக்கன்பட்டி, ஈஸ்வரமூர்த்தி பாளையம், மங்களபுரம், நாவல் பட்டி, ஆயில்பட்டி, மூலப்பள்ளிப்பட்டி, வடுகம் முனியப்பன் பாளையம், பெருமாள் கவுண்டன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் மற்றும் ஆர். புதுப்பட்டி, ஆர். பட்டணம் பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் தமிழ்மணி பேசியதாவது விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாய பட்டதாரி ஆகிய விவசாயத்துறை அதிகாரியாக பணியாற்றி அப்பணியில் திருப்தி அடையாமல் நேரடியாக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் அரசு பணியைத் துறந்து அதிமுக குடும்பத்தில் ஒருவராக இணைந்து செயல்பட தொடங்கினேன். நான் சார்ந்த பரமத்தி வேலூர் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வந்த எனக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி யார் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வாய்ப்பளித்து அனைத்து பகுதி மக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனால் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து உங்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவேன் மக்கள் சேவையை பிரதானமாகக் கொண்டு செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன் ‌ இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அனைத்து இடங்களிலும் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags

Next Story