நாமக்கல்: பிஜிபி கல்லூரி மாணவர்களின் வேளாண் கண்காட்சி!
உழவன் செயலியை போல இக்கல்லூரி மாணவ /மாணவிகள் வடிவமைத்த "விவசாயகம்" என்ற செயலி (APP) அறிமுகப்படுத்தப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் 150 க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஏராளமானோர் பார்வையிட்டனர். நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை, வேட்டாம்பாடி அருகே செயல்பட்டு வரும் பிஜிபி வேளாண்மை கல்லூரியில் 4-ம் ஆண்டு மாணவர்கள் கிராமப்புற விவசாய பணி அனுபவத்தின் செயல் விளக்கத்தை விவசாய கண்காட்சியாக வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.இந்தக் கண்காட்சியை, நாமக்கல் உதவி வனப் பாதுகாவலர் ஷாநவாஸ்கான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கோபால் முன்னிலை வகித்தார். கல்விக் குழுமத்தின் தலைவர் சம்பத் தாளாளர் கணபதி, விவசாயிகள் கல்லூரி மாணவ மாணவிகள், உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் மாணவர்கள் சுமார் 150 விவசாய மாதிரிகளை காட்சிப்படுத்தினர். இக்கண்காட்சியில், மாணவர்களின் விவசாய உள்நாட்டு உற்பத்தி தொழில்நுட்பக் கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு, அதிகமாக மகசூல் பெறும் வழிமுறைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.மேலும், லாபகரமான கால்நடைகள் வளர்ப்பது, நாற்று வளர்த்து சோளம் பயிரிடுதல், நீர் மேலாண்மை, சிறுதானியங்களில் நன்மைகள், சிறுதானிய மனிதன், உழவன் செயலியை போல இக்கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த "விவசாயகம்" என்ற செயலி (APP), வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படும் நுண்ணூட்ட சத்துக்கள், உள்ளிட்டதை காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியை காண ஏராளமான விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டு தகவல்களை தெரிந்து கொண்டனர்.
Next Story