நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நிா்வாகத்தால் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று அருள் பாலித்தார், இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அண்டை மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து இருந்தனர்.
Next Story