முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் !

முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் !

ஆஞ்சநேயர்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் சாத்துப்படி இன்று (ஏப்ரல் -2) நடைபெற்றது. முத்தங்கி சேவையில் நாமக்கல் அனுமனை தரிசனம் செய்தால் இழந்தது கிடைக்கும் ராஜயோகம் தருவார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் சாத்துப்படி இன்று (ஏப்ரல் -2) நடைபெற்றது. நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.

இங்கு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி அமாவாசை, பெளா்ணமி, அனுமன் ஜெயந்தி,புத்தாண்டு நாள்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் இன்று காலையில் வடை மாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் நல்லெண்ணெய், பால், தயிா், வெண்ணெய், தேன், பஞ்சாமிா்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகமும், தொடா்ந்து முத்தங்கி அலங்காரமும் செய்யப்பட்டன.

சுவாமியை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.முத்தங்கி சேவையில் நாமக்கல் அனுமனை தரிசனம் செய்தால் இழந்தது கிடைக்கும் ராஜயோகம் தருவார்.

நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவையில் தரிசித்தால், ராஜயோகம் கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.மேலும் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்தருளுவார் அனுமன் என்று போற்றுகிறார்கள்.

Tags

Next Story