சிறப்பு ராஜ அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!
நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் மார்ச் 26ல் திருத்தேரோட்டமும், அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி நிகழாண்டு பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. தினந்தோறும் இரவு 8 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
மார்ச் 26–ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டமும், மாலை 4.30 மணியளவில் அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது.அதன் படி இன்று (மார்ச்-20) இரவு சுவாமி அனுமந்த வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அதை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பச்சை பட்டாடை சாற்றி சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story