அக்சய திரிதியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்!

அக்சய திரிதியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்!

 அட்சய திரிதியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  

அட்சய திரிதியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அக்சய திரிதியை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் சந்தனம், சீயக்காய், திருமஞ்சனம் , பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து, கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

விலை உயர்ந்த முத்துக்களால் ஆஞ்சநேயருக்காக உருவாக்கப்பட்ட முத்தங்கியை பட்டாச்சாரியார்கள் அணிவித்தனர். பின்னர் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story