நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் அருகே உள்ள ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

நாமக்கல் அருகே உள்ள ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் போதுப்பட்டி சாலையில் உள்ள ஏ.எஸ்.பேட்டையில் ஆண்டு தோறும் செல்வ விநாயகர் மற்றும் பகவதியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலையில் வேல் எடுத்தல், கும்பம் பாழித்தல் போன்ற நிகழ்வுகள் நடந்தன.

இன்று திங்கட்கிழமை காலை வேல், திருவீதி உலா நடத்தப்பட்டது. மாலையில் குழந்தைகளுக்கு விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது, பிறகு மாவிளக்கு பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. இதையொட்டி பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags

Next Story