100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் இருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.இராஜேஷ் கண்ணன், தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்திய தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம், QNQ மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய0 இந்த மாரத்தான் ஓட்டத்தில், 6 வயதிற்குட்பட்டோர் 600 மீட்டர், 12 வயதிற்கு உட்பட்டோர் 2 கிலோமீட்டர், 16 வயதிற்கு உட்பட்டோர் 3 கிலோமீட்டர், 16 வயதிற்கு மேற்பட்டோர் 5 கிலோமீட்டர் ஆகிய பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
மாரத்தான் போட்டியில் பங்கேற்றோர் அதில் வாக்களிப்பது குறித்து கையெழுத்து இட்டனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 100% வாக்களிப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் என் வாக்கு என் உரிமை வாசகம் குறித்த ஆடை அணிந்து சென்றனர்.இதில் , மேலும் மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி கையில் மரக்கன்றுகளை ஏந்தியவாறும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும், இந்த மாரத்தான் ஓட்டத்தில், மேட்டூரை சேர்ந்த பிரசன்னா என்பவர் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கிலோ மீட்டருக்கு பின்னோக்கி நடந்து சென்றார்.
இந்த ஓட்டமானது வேப்பநத்தம் பிரிவு சாலை வரை சென்று திரும்பி வந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களைப் பிடித்த ஆடவர் மற்றும் மகளிர், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை , QnQ மருந்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி முத்துரயா, நளா ஹோட்டல் மேலாண் இயக்குநர் சுரேஷ், தங்கம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குழந்தைவேல், பசுமை நாமக்கல் தில்லை சிவக்குமார் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள் மேலும் மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.