வேட்பாளரை மாற்றினால் அவர்களின் கொள்கை மாறிவிடுமா ? - கே.பி. ராமலிங்கம்

வேட்பாளரை மாற்றினால் அவர்களின் கொள்கை மாறிவிடுமா ? - கே.பி. ராமலிங்கம்

கே.பி. ராமலிங்கம் 

தமிழக பாஜக மாநில துணை தலைவரும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், '' எனக்கு உடல்நிலையும் சரியில்லை. கட்சி தலைமை எனக்கு கட்டாயபடுத்தி சீட் வழங்கியதால் தேர்தலில் போட்டியிடுகிறேன். வேறு வழியில்லை கட்சி கட்டாயமாக வற்புறுத்தியதால் தான் கட்டளையை ஏற்க வேண்டியதாயிற்று.

பாஜகவின் தலைமை அளித்த கட்சிப்பணியை முழுமையாக செய்து கொண்டு இருந்தேன், என்னை பொறுத்தவரை உடல் நிலை ஒத்துழைக்குமா என பயந்து கொண்டு இருந்ததால் தான் இந்த தேர்தலில் நிற்க மாட்டேன் என சொன்னதற்கு காரணம்.கட்சி கட்டாயமாக வற்புறுத்தியதால் தான் கட்டளையை ஏற்க வேண்டியதாயிற்று.

தமிழ்நாடு மக்களை பொறுத்தவரை யார் பிரதமர் என்பது தான் கேள்வி. பிரதமர் மோடி தேவையா ? இல்லையா ? என வாக்காளர்கள் தான் வாக்களிக்க வேண்டும்,

அறிஞர் அண்ணாவும், கலைஞரும் ஆரம்பிக்காத அணி எல்லாம் இவங்க(திமுக) ஆரம்பிச்சாங்க. அயலக அணி என ஆரம்பித்து போதை பொருட்களை கடத்தி கைது செய்யப்படுகிறார்கள். எதுக்காக இந்த அணி உருவாக்கப்பட்டது என சந்தேகம் எழுகின்றன, அயலக அணி நிர்வாகிகள் தூபாய்ல போய் நிக்க போராங்களா ? ஆஸ்திரேலியாவில் உதயசூரியனில் நிக்க போறாங்களா? எதுக்காக அயலக அணி என கேள்வி எழுப்பினார்.

அருந்தியர் சமுதாய மக்கள் குறித்து நாமக்கல் எம்.பி தொகுதி வேட்பாளர் ஒருவர் பேசிய வீடியோ வெளியே வந்தது, வேட்பாளரை மாற்றினால் அவர்களின் கொள்கை மாறிவிடுமா? வேறு வேட்பாளரை போட்டால் அந்த கருத்தில் இருந்து மாறி விடுவார்களா ?

பாஜக சாதி, மதம் பார்ப்பது கிடையாது, எல்லோரும் சமம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story