நாமக்கல் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

நாமக்கல் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் 

நாமக்கல் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் தாமரை மலர் கொடுத்து வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் ராசிபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தாமரை மலர் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல், ராசிபுரம் சேந்தங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு,சங்ககிரி போன்ற பகுதிகளில் நகராட்சி, ஒன்றியம், ஊராட்சி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வருகிறார். ராசிபுரம் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பிரதமர் மோடியின் கையெழுத்துடன் கூடிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை,

பாஜகவின் சின்னமான தாமரை மலர் போன்றவற்றை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது மத்திய அரசின் பத்தாண்டுகால மக்கள் நல சாதனை திட்டங்கள் குறித்தும், ஊழலற்ற நிர்வாகம் அமையவும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். இவருடன் பாஜக கட்சியின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளான பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் அவர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடத்தில் வாக்குகள் கேட்டார். அவருக்கு பொதுமக்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் நகரத் தலைவர் பி. வேலு, மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் சதீஷ் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஆர்டி இளங்கோ, சுகன்யா நந்தகுமார், மகளிர் அணி சித்ரா, திவ்யா, மகாலட்சுமி மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் குமார், மணிகண்டன்,

லோகநாதன் , காவிராஜன், தொகுதி ராஜா, வெங்கடேஷ், குமார், குமார், அலாவுதீன், கன்னையா பஸ் சீனிவாசன், மற்றும் கூட்டணி கட்சினர் பாமக மோகன்ராஜ், மாரிமுத்து, அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story