ரத்த தானம் செய்த நாமக்கல் சி.எம்.எஸ் கல்லூரி மாணவர்கள்!

நாமக்கல் சி.எம்.எஸ். பொறியியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்கள்.இரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இம்முகாமை வட்டார மருத்துவ அலுவலர் மாலதி மற்றும் ரெட் கிராஸ் மாவட்ட செயலர் சி.ஆர் இராஜேஸ் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்து பேசுகையில், தானத்தில் சிறந்தது இரத்த தானம், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும், ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார்கள்.

நாமக்கல் சி.எம்.எஸ். பொறியியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்கள். இரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முகாமில் சித்த மருத்துவர் பூபதி ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜ கணபதி , நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story