நாமக்கல்:கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி - மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
பைல் படம்
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு ஏப்ரல் 29 முதல் முன்பதிவு செய்யலாம். இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும், நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நடைபெற்று வருகிறது. துவங்குகிறது.
இந்த ஆண்டிற்கான, மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வருகின்ற ஏப்ரல் 29ம் தேதி முதல் முன்பதிவு துவங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி +2 தேர்ச்சி பெற்று 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விருப்பமுடைய,தகுதியானோர் www.tncuicm.comm என்ற வெப்சைட் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப தேதி, பயிற்சி கட்டண விவரங்கள் மற்றும் நிபந்தனைகளை வெப்சைட்டில் வெளியிடப்படும். மேலும் விபரம் பெற, நாமக்கல் சேலம் ரோட்டில் அமைந்துள்ள, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04286-290908, 9080838008 தொலைபேசி எண்களிலோ அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.