மணல் லாரிகளுக்கு கட்டுப்பாடு; நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மணல் லாரிகளுக்கு கட்டுப்பாடு; நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
X

நாமக்கல் ஆட்சியர்

கல்குவாரியில் இருந்து சரளை கற்கள், மணல் மற்றும் சுடு கலவைகளை கட்டுமானப்பணிக்காக எடுத்துச்செல்லும் போது சரியான கொள்ளளவுடன் தார்பாய் கொண்டு மூடி சாலையில் சிதறாமல் எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் (SH-95) சாலையில் கிரசர்ஸ் நிறுவனங்களின் கனரக வாகனங்களில் அதிக பாரத்துடன் சரளை கற்கள், மணல் மற்றும் சுடு கலவைகளை கொள்ளவுக்கு மேல் எடுத்து செல்வதால் சாலையில் சிதறி விபத்துகள், சாலையின் மேல்தளம் மற்றும் சாலை உபகரணங்கள் சேதமடைவது தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் (SH-95) சாலையில் கிரசர்ஸ் நிறுவனங்களின் கனரக வாகனங்களில் அதிக பாரத்துடன் கொள்ளவுக்கு மேல் சரளை கற்கள், மணல் மற்றும் சுடு கலவைகளை எடுத்து செல்வதால் சாலையில் சிதறி விபத்துகள், சாலையின் மேல்தளம் மற்றும் சாலை உபகரணங்கள் சேதமடைகின்றன. எனவே, வாகனங்களில் சரளை கற்கள், மணல் மற்றும் சுடு கலவைகளை கட்டுமானப்பணிக்காக எடுத்துச்செல்லும் போது சரியான கொள்ளளவுடன் தார்பாய் கொண்டு மூடி சாலையில் சிதறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்.

மேலும் M-sand மற்றும் P-sand போன்றவற்றை உலர்ந்த நிலையில் எடுத்துச்செல்ல வேண்டுமென கிரசர்ஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை) சென்னை-கன்னியாகுமரி தொழிற்த்தடத் திட்டம் சி.சசிக்குமார், உதவி இயக்குநர் புவியம் (மற்றும்) சுரங்கத்துறை லோகநாதன், மாசு கட்டுபாட்டு வாரியம் கோட்டப்பொறியாளர் ரகுநாதன் வட்டார போக்குவரத்து அலுவலர் (வடக்கு) முருகேசன், சேந்தமங்கலம் வட்டாட்சியர் சி.சக்திவேல், உட்பட கல்குவாரி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story