பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் சுற்றுலா - துவக்கி வைத்த ஆட்சியர்

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை பிரபலப்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள 50 மாணவர்கள் சுற்றுலாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்களில் களங்காணி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளை இன்று திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளனர். இச்சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத் துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story