காலை உணவு திட்டம்: ஆட்சியர் ஆலோசனை

காலை உணவு திட்டம்:  ஆட்சியர் ஆலோசனை

நாமக்கல் ஆட்சியர் உமா 

நாமக்கல் மாவட்டத்தில் 843 பள்ளிகளில் 40,201 மாணவ, மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (7.5.2024) மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் விரிவுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வட்டாரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்துப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 16.09.2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

. நாமக்கல் மாவட்டத்தில் 843 பள்ளிகளில் 40,201 மாணவ, மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் ஊரக பகுதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு உதவி பெறும் 43 பள்ளிகளில் 2,426 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்துப்படுத்தபடவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

Tags

Next Story