நாமக்கல் மாவட்டத்தில் 1,760 தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வுப் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு அரசு வரும் ஜுன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பாக அனைத்து பள்ளி பேருந்துகளும் ஒவ்வொரு கல்வி ஆண்டும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாக District Level Inter Department Committee குழு முன்பு அனைத்து பள்ளி வாகனங்களும் தகுதியான நிலையில் உள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதின்படி, நாமக்கல் (வடக்கு) மற்றும் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதி 2012-ன் படி மாவட்டத்தில் நாமக்கல் (வடக்கு) மற்றும் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை சேர்ந்த 622 பள்ளி வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் (வடக்கு) - 270, பகுதி அலுவலகம், இராசிபுரம் - 284, நாமக்கல் (தெற்கு) - 352, பகுதி அலுவலகம், பரமத்தி வேலூர் - 212, திருச்செங்கோடு - 395, குமாரபாளையம் - 247 வாகனங்கள் என மொத்தம் 1,760 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வின் போது, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஓட்டுனர், நடத்துனர், மாணவ, மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டுக்கருவி, அவசரகால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story