டோல்கேட்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கிய நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA தலைமையில் நடைபெற்ற போலியோ சொட்டு முகாமில், ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார். மொத்தம் 1,15,600 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்க விழா ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநிலங்களவை எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் , நாமக்கல் - பரமத்தி சாலை, இராசாம்பாளையத்தில் (கீரம்பூர் அருகே) அமைந்துள்ள நெடுஞ்சாலை சுங்க சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்க விழா, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பொது மக்களின் குழந்தைகளுக்கு இம்முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

போலியோ சொட்டு முகாம் ஒருங்கிணைப்பு பணியில் நாமக்கல் JCI முன்னாள் தலைவர்கள் முகமது ரபி, பிரதீப் மற்றும் அனைத்து LGB உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முகாமில் 1,15,600 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1170 முகாம்களும், நகராட்சி பகுதியில் 208 முகாம்களும், மொத்தம் 1378 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் சுமார் 4418 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 27 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story